நிறைவடைந்தது வலிமை படப்பிடிப்பு..! எப்போ ரிலீஸ்..! ரசிகர்கள் ஆர்வம்..!

மாஸ்கோவில் இருந்து சென்னை திரும்பும் படக்குழு..!
நிறைவடைந்தது வலிமை படப்பிடிப்பு..! எப்போ ரிலீஸ்..! ரசிகர்கள் ஆர்வம்..!

எச்.வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், அஜித்தின் 60வது படமாக உருவாகி வரும் வலிமை படத்தின் அப்டேட்டை கடந்த 2 வருடங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர். கடந்த சில தினங்களாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சிங்கிள் டிராக் போன்றவை வெளியாகி அனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. 

இந்த நிலையில், படம் எப்பொழுது வெளியாகும் என பலரும் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கின்றனர். ஏற்கனவே தீபாவளிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படமும், பொங்கல் அன்று விஜய்யின் பீஸ்ட் படமும், கிறிஸ்துமஸ் அன்று சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படமும் வெளியாகவிருப்பதாக கூறப்படும் நிலையில், வலிமை எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக ரஷியாவுக்கு சென்றிருந்தது படக்குழு. அங்கு தல அஜித்தின் அதிரடி பைக் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பின்னணிப் பணிகளும் உடனுக்குடன் நடைபெற்று வந்த நிலையில், விரைவிலேயே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com