2022இல் கூட பெண்களை இப்படித்தான் கேட்பீர்களா?- மௌனம் கலைத்த ஆல்யா பட்!

2022இல் கூட பெண்களை இப்படித்தான் கேட்பீர்களா?- மௌனம் கலைத்த ஆல்யா பட்!

பாலிவுட் இளம் ஜோடிகளான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் காதல் கதை 4 வருடமாக உருவான பிரம்மாஸ்திரா படத்தில் இருந்து தொடங்கியது.

கடந்த 2014ம் ஆண்டு, காஃபி வித் கரண் என்ற தொலைகாட்சி தொடர் மூலம், ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இருப்பதாக ஆலியா பட் தெரிவித்திருந்தார்.

முதல் போன் கால்:

அந்த வகையில், ரன்பீரின் ராக்ஸ்டார் படம் வெளியானதும், அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஆலியா பட், “உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்கள் எனக்கு உயிர் போல. உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று தொடர்ந்து ஒரு மணி நேரம் பேசி தனது காதலை வெளிப்படுத்திய ஆலியா பட்டுக்கு சர்பிரைஸ் தரும் வகையில், ரன்பீர் கபூர், அந்த வருடமே வந்த மற்றொரு காஃபி வித் கரண் எபிசோடில், “ஆலியா பட்டை டேட் செய்ய விரும்புகிறேன்” என தெரிவித்து, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அப்போது ரன்பீர் பிரபல பாலிவுட் நடிகை காட்ரீனா கைஃபுடன் உறவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

2018ஆம் ஆண்டு இவர்கள் இருவரையும் முதன் முறையாக பிரம்மாஸ்திரா படம் மூலம் இணைந்தனர். இப்படம் மூன்று பாகங்களாக வெளியாக உள்ளதைத் தொடர்ந்து, இவர்களின் 4 வருட காதல், திருமணத்தில் முடிந்தது. கடந்த ஏப்ரல் (2022) மாதம் 14ஆம் தேதி இவர்களின் திருமணம் கோலமாக நடைபெற்றது. மேலும், இவர்கள் இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்த பிரம்மாஸ்திரா முதல் பாகம், 4 வருடங்களுக்கு பிறகு செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

ஆலியாவின் கர்ப்பம்:

இது ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க, சமீபத்தில் ஆலியா பட்டின் போட்டோஸ் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அந்த வகையில், ரன்பீர் கபூர் - ஆலியா பட்டுக்கு திருமணம் ஆகி 1 மாதத்திலேயே, தான் கருவுற்றிருக்கும் விஷயத்தை சந்தோசமாக தனது சமூக வளைத்தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

தனது நெகிழ்வான தருணங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட ஆலியாவைச் சுற்றி, தற்போது பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. சமீபத்தில் ஆலியா பட் "பேபி பம்ப் போட்டோஸ்" இணையத்தில் வைரலான நிலையில், அதை வைத்து நெட்டிசன்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

எப்படி கர்ப்பம்?

திருமணமாகி 2 மாதங்கள் ஆன நிலையில், 5 மாதம் கருவுற்று பெண் இருக்கும் அளவுக்கு ஆலியா பட்டின் உடல் இருக்கிறதே! அது எப்படி? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் திருமணத்திற்கு முன்பே இருவரும் இணைந்து விட்டீர்களா? என பல தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து கேள்விகளை எழுப்பி வந்த நிலையில், இதற்கு தரமான பதில் ஒன்றை ஆலியா பட் கொடுத்திருக்கிறார்.

ஆலியாவின் பயங்கரமான பதில்:

அதில், பெண்கள் எப்பொழுதும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறார்கள், அது அவர்களின் தவறு என்று தொடர்ந்து போராடுகிறார்கள். மேலும் முழுமையாக இருப்பதால், அந்த வகையான சிந்தனையுடன் நரகத்திற்குச் சொல்ல விரும்புகிறேன். நாம் 2022ல் இருக்கிறோம்.. மக்கள் 2022இல் இருப்பதைப் போலவே வாழத் தொடங்க வேண்டும். முட்டாள்தனமான விஷயங்களில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து, முன்னுதாரணமாகவும் செயலாகவும் நான் தொடர்ந்து வழிநடத்த விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com