மறக்குமா நெஞ்சம் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக நிற்கும் யுவன்!!

மறக்குமா நெஞ்சம் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக நிற்கும் யுவன்!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள், ரசிகர்களை சிரமத்தில் ஆழ்த்தியதால், அதிருப்தியடைந்து பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி கடந்த 10ம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

அதுமட்டுமல்லாமல் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் சிரமப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் குழந்தைகள் தொலைந்து போனதாகவும் புகார்கள் எழுந்தன. பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த நிகழ்வை தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமானுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆதரவு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தான் உட்பட கலைஞர்கள் தீவிரப் பங்கை ஏற்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஒரு சக இசையமைப்பாளர் என்ற முறையில், துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக நிற்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அடுத்த நிகழ்ச்சிகளில் இது போன்ற முறைகேடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமெனவும், முக்கியமாக 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com