விலை சரிவால் செடியிலேயே கருகும் கத்திரிக்காய்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே வரத்து அதிகரிப்பு காரணமாக விலை சரிவு அடைந்த பச்சை நிற நீள கத்திரிக்காய் அறுவடை செய்யாமல் செடியிலே விட்டு வைத்த சம்பவம் விவசாயிகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலத்தில் அதிகளவில் பச்சை நிற நீள கத்திரிக்காய் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தாயரான நிலையில் உள்ளது.

விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட பச்சை நிற நீள கத்திரிக்காய் தமிழ்நாடு உட்பட கர்நாடகா, ஆந்திரா மற்றும் இதர மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தினசரி காய்கறிகள் சந்தைகளில் இந்த பச்சை நிற நீள கத்திரிக்காய் வரத்து அதிகரிப்பு காரணமாக விலை சரிவு அடைந்துள்ளதாக விவசாயிகள் மத்தியில் கூறப்படுகிறது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த கத்திரிக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தற்போது வரத்து அதிகரிப்பு காரணமாக இந்த பச்சை நிற கத்திரிக்காய் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும் குறைவாக  விற்பனை ஆகுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த கத்திரிக்காய் வரத்து அதிகரிப்பு காரணமாக விலை சரிவு அடைந்த நிலையில் அறுவடைக்கு தயாரான நிலையிலும் விவசாயத்தில் போதிய இலாபம் கிடைக்காத காரணத்தால் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட பச்சை நிற நீள கத்திரிக்காய் அறுவடை செய்யாமல் செடியிலே விட்டு வைத்த சம்பவம் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க   |  பட்டாசு ஆலை விபத்து: நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ். கோரிக்கை