பருத்தி சாகுபடி செலவுகளை ஈடு செய்ய முடியாததால் விவசாயிகள் வேதனை..! நிவாரணம் கோரி போராட்டம்.

பருத்தி சாகுபடி செலவுகளை ஈடு செய்ய முடியாததால் விவசாயிகள் வேதனை..! நிவாரணம் கோரி போராட்டம்.

பருத்தி சாகுபடி செலவுகளை கூட ஈடு செய்ய முடியாததால்  நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் வழங்ககோரி புதுச்சேரி மாநிலம்  காரைக்கால் இயக்குனர் அலுவலகத்தின் முன் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது

இந்த போராட்டத்தில், கடந்த ஆண்டு ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்பனையான பருத்தி, இந்த ஆண்டில் 45 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதாகவும், இதனால் பருத்தி சாகுபடி செலவுகளை கூட ஈடு செய்ய முடியாமல் வேதனை அடைந்துள்ளதாகவும் விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர். 

மேலும்  நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் வழங்க வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தினா். 

சுமார் 4500 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் சிம்பின் மாவு பூச்சி போன்ற நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த விவசாயிகள் பெருந்தொகையை செலவு செய்துள்ளதாகவும் விளைவித்த பருத்திக்கு கடந்தாண்டு ஒரு கிலோ 120க்கு விற்ற பருத்தி பஞ்சு இந்த ஆண்டில் வரும் 45 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதாகவும், இதனால் பருத்தி சாகுபடி செலவுகளை கூட விவசாயிகளால் ஈடு செய்ய முடியாமல் வேதனை அடைந்துள்ளதாகவும் விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர். 

எனவே காரைக்கால் மாவட்டத்தில் நடைபாண்டில் பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 20,000 மற்றும் பயிர் காப்பீடு தொகையாக ரூபாய் 50,000 வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தினர். 

அதன்படி, காரைக்கால் வட்டார வளர்ச்சி துறை அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகத்தை முற்றுகிட முயன்றனர். அப்போது மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டனம் முழக்கங்களை எழுப்பினர் பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தை எடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிக்க   | ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை: ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..?