நாளை மாலை முதல் சென்னையில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மழை பாதிப்பு உள்ள பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கோள்ள ஏற்கனவே 30 NDRF வீரர்கள் உள்ள நிலையில், கூடுதலாக 90 வீரர்கள் கடலூர்,திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து விரைந்து கொண்டு உள்ளனர்
நாளை மாலை முதல் சென்னையில் மீண்டும் மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.