யானைகளுக்கு உடல் நலப்பரிசோதனை!

யானைகளுக்கு உடல் நலப்பரிசோதனை!
Published on
Updated on
1 min read

முதுமலையில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை துவக்கம். ஒன்றன்பின் ஒன்றாக ஒய்யாரமாக வந்து எடை போட்டு சென்ற  வளர்ப்பு யானைகள். கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் யானைகள் ஆரோக்கியமாக இருப்பதாக வனத்துறையினர் தகவல்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு மற்றும் அபயாரணயம் என 2 யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.  

யானைகளின் தற்போதைய உடல் நலத்தை பரிசோதனை செய்யும் வகையில் தொரப்பள்ளியில் உள்ள எடை மேடையில் எடை போடும்பணி நேற்று தொடங்கி இன்றும் இரு முகாம்களில் இருந்து யானைகள் கொண்டுவரப்பட்டு எடை கணக்கிடப்பட்டு வருகிறது. 

அவ்வாறு எடை போடும் யானைகளுக்கு எடை கூடும் பட்சத்தில் கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் மாற்றத்தை கண்டறிந்து அந்த யானைக்கு நடை பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து உணவுகளை குறைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட உள்ளனர்.

மேலும் யானைகளுக்கு  எடை குறையும் பட்சத்தில் அதற்கான ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு யானையை பராமரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட உள்ளனர். இந்த எடை கணக்கீடு பணியில் கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் ஒவ்வொரு யானையும் உடல் ஆரோக்கியத்தோடு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com