அடுத்த 3 ஆண்டுகளில் புதிதாக 10 அணு உலை அலகுகள்- மத்திய அரசு திட்டவட்டம்

இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் புதிதாக 10 அணு உலை அலகுகளை மத்திய அரசு அமைக்க உள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளில் புதிதாக 10 அணு உலை அலகுகள்- மத்திய அரசு திட்டவட்டம்

இதுதொடர்பாக  அணுசக்தி துறை வெளியிட்ட தகவலில், செலவினம் மற்றும் விரைந்து பணியை முடிக்கும் விதமாக தலா 700 மெகா வாட் மின் உற்பத்தியை வழங்கும் 10 அணு அலகுகளை அடுத்தடுத்து அமைக்க திட்டமிட்டுள் ளதாக கூறியுள்ளது.  

அதன்படி கர்நாடகாவின் கைகா பகுதியில் அடுத்தாண்டு 5 மற்றும் 6-வது அணு உலை அலகுகள், 2024ம் ஆண்டில்  கோரக்பூர் அனு வித்யூத் உலையில் 3,4  அலகுகள்,  ராஜஸ்தான் அணு உலையில் 1 முதல் 4 அலகுகள் மற்றும் 2025ம் ஆண்டில்  மத்திய பிரதேச அணு உலையில் 1,2 அலகுகளை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தநிலையில் சுமார் 1.05 லட்சம் கோடி ரூபாய் செலவிலான இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதால்,  சம்பந்தப்பட்ட இடங்களிலிருந்து மக்களை வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.