100 கோடி தடுப்பூசி மைல்கல் - நாடு முழுவதும் 100 பாரம்பரிய சின்னங்களை மூவர்ண நிறத்தில் ஒளிரும்..

இந்தியாவில் 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்திய உடன், நாடு முழுவதும் உள்ள 100 பாரம்பரிய நினைவு சின்னங்களை மூவர்ண நிறத்தில் ஒளிரச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் எண்ணிக்கை 99 கோடியை தாண்டியுள்ளது. சில நாட்களில் 100 கோடி தடுப்பூசி என்ற மைல்கல்லை நாம் எட்ட உள்ளோம். அதனை கொண்டாடும் விதமாக, நாடு முழுவதும் உள்ள 100 பாரம்பரிய நினைவு சின்னங்களை மூவர்ணத்தில் ஒளிர செய்ய, மத்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. அதற்காக தெலங்கானாவில் உள்ள ராமப்பா கோயில், கர்நாடகாவில் உள்ள ஹம்பி விட்டலா கோவில் உள்ளிட்டவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

சுகாதார வல்லுநர்கள், முன்கள பணியாளர்கள், விஞ்ஞானிகள், தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, சுகாதார மையங்கள் மீது மலர் மழை பொழியவும் திட்டமிடப்பட்டுள்ளது.