கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 12 வயது சிறுவன் உயிரிழப்பு...

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தாக்குதலுக்கு 12 வயது சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான்.  

கேரளாவில்  நிபா வைரஸ் தாக்குதலுக்கு 12 வயது சிறுவன் உயிரிழப்பு...

கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 3ம் தேதி, நிபா வைரஸ் அறிகுறியுடன் 12 வயது சிறுவன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனை பரிசோதித்ததில் சிறுவனுக்கு மூளை அழற்சி மற்றும் இதயச்சுவரில் வீக்கமும் காணப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட  நிலையில், இன்று சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

நிபா வைரஸ் தாக்குதலால்  நடப்பாண்டில் பதிவான முதல் பலி இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு திணறி வரும் நிலையில், நிபா வைரஸ் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, தனிக்குழு ஒன்றினை மத்திய அரசு கேரளாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.

மேலும் சிறுவனுடன் கடந்த 12 நாட்களாக தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள், கிராமத்தினரை கண்டறிந்து பரிசோதிக்கும் முயற்சியை சுகாதாரத்துறை முடுக்கி விட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டும் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் கோர முகத்தை காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.