காதலனின் எச்.ஐ.வி ரத்தத்தை தனக்குள் ஏற்றிக் கொண்ட 15 வயது சிறுமி!

அசாமைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தனது காதலனின் எச்.ஐ.வி ரத்தத்தை தனது உடலில் தாமாகவே ஏற்றிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலனின் எச்.ஐ.வி ரத்தத்தை தனக்குள் ஏற்றிக் கொண்ட 15 வயது சிறுமி!
Published on
Updated on
2 min read

காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் பல தரப்பட்டவர்களை நாம் பார்த்ததுண்டு. காதலுக்கு கண்ணில்லை, புத்தியுமில்லை என்றான் ஒரு கவிஞன். அதனை நிஜ வாழ்க்கையில் நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

2008ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் என்ற படம், வசூல் ரீதியாக நல்ல வரவேற்புப் பெற்றாலும், பலரது விமர்சனங்களின் கவிழ்ந்தது தான் நிதர்சண உணமி. பெற்றோரை மதிக்காமல், பாதியில் வந்த காதலிக்காக, பைத்தியமே ஆகும் இது போன்ற காதலர்கள் இருப்பது, இந்த சமூகத்திற்கே கேடு என்றெல்லாம் பலரால் விமர்சிக்கப்பட்ட படம் அது. வெறும் படத்திலேயே இப்படி வசைப் பாடும் மக்களுக்கு, சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அருவருக்கத்தக்க விஷயமாகியும் இருக்கிறது என்றே சொல்லலாம்.

அசாமின் சோல்குச்சி என்ற பகுதியில் ஒரு 15 வய்து சிறுஇ, யாரும் யோசிக்கக் கூட தயங்கும் ஒரு காரியத்தை செய்து, பெரும் பேசுபொருளாகியுள்ளார்.

வெளியான தகவல்களின் படி, அசாம், ஹாஜோ நகரம், சாட்தோலா பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு எச்.ஐ.வி பாசிடிவ் ஆகியுள்ளது. பாதுகாப்பு கருதி, அவர்கள் இருவரது அடையாளம் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முகநூல் மூலம், இந்த 15 வயது சிறுமியை காதல் வயப்படுத்தியிருக்கிறார்.

மூன்று ஆண்டுகளாக தொடர்ந்த காதல், ஒரு பிரியா காதலானதையடுத்து, வீட்டிற்கு விஷயம் தெரிந்து எதிர்ப்பு வந்துள்ளது. இதனால், பல முறை அந்த இளைஞருடம் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். ஆனால், பெற்றோரால் மறுபடி மறுபடி வீட்டிற்கு கொண்டு வரப்பட்டார்.

தனது காதலனுக்கு எச்.ஐ.வி இருப்பது மட்டுமே ஒரு பிரச்சனையாக குடும்பம் பார்ப்பதால், யாருமே நினைத்துக் கூட பார்க்காத இந்த செய்லை செய்தார். தனது காதல்ரின் எச்.ஐ.வி ரத்தத்தை எடுத்து, தனது உடலில் ஊசி மூலம் செலுத்திக் கொண்டுள்ளார் சிறுமி.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஹோஜோ போலீசார் அந்த இளைஞரை கைது செய்து, பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவத்தால், பலரும் தங்கள் வீட்டு பெண் குழந்தைகள் குறித்து பீதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com