ஆந்திராவில் இரயில் விபத்து; 19 பேர் உயிரிழப்பு!

Published on
Updated on
1 min read

ஆந்திராவில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் உயிாிழந்தோாின் எண்ணிக்கை 19-ஆக உயா்ந்துள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

குண்டூரில் இருந்து ராயகடா சென்ற விரைவு ரயில் சிக்னல் கோளாறு காரணமாக கண்டகப்பள்ளி ரயில் நிலையத்தில் நின்றுள்ளது. அப்போது விசாகப்பட்டினம் நோக்கி சென்ற பலாசா பயணிகள் ரயில் ராயகடா விரைவு ரயில் மீது எதிா்பாராதவிதமாக பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ராயகடா விரைவு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதில், 19 பேர் உயிரிழந்துள்ளனா். ஏராளமான பயணிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து தகவலறிந்து சென்ற ரயில்வே காவல்துறையினர் மற்றும் தேசிய போிடா் மீட்புப்படையினர் ரயில் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். தொடா்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகாிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

விபத்து காரணமாக தண்டவாளங்களில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு கிடப்பதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாற்றுப்பாதையில் 5 ரயில்கள் இயக்கப்பட்டன. 

இதற்கிடையே மாநில அரசு மற்றும் ரயில்வே துறை சாா்பில் விபத்தில் உயிாிழந்தவா்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், மத்திய அரசு சாா்பில் 2  லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் காயமடைந்தவா்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசும், ரயில்வே துறையும் அறிவித்துள்ளது. 

ரயில் விபத்தில் உயிாிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவா் திரவுபதி முா்மு, பிரதமா் மோடி, தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சா் மம்தா பானா்ஜி உள்ளிட்டோா் இரங்கல் தொிவித்துள்ளனா். 

விபத்து எதிரொலியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட இருந்த
ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் மட்டும் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு  ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com