அடுக்குமாடி கட்டிட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 2 சிறுவர்கள் உயிரிழப்பு

டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  

அடுக்குமாடி கட்டிட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 2 சிறுவர்கள் உயிரிழப்பு

டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டெல்லியில் சப்ஜி மண்டி பகுதியில் நேற்று திடீரென கட்டுமான பணி நடந்து வந்த 4 மாடி  கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த உள்ளூர் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

இடிபாடுகளில் சிக்கியதாக 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் மீட்கப்பட்ட நிலையில், சிறுவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நிலைமையை கண்காணித்து வருவதாகவும்,  மீட்பு பணி நடைபெறுவதாகவும் முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.