இந்தியாவில் 5 இல் 2 பெண்கள் குடும்ப வன்கொடுமையால் பாதிப்பு - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

இந்தியாவில் 5 ல் 2 திருமணமான  பெண்கள் குடும்ப வன்கொடுமைக்கு ஆளாகுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் 5 இல் 2 பெண்கள்  குடும்ப வன்கொடுமையால் பாதிப்பு - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

சமீபகாலமாக  பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருமணமாகி ஒரு சில வாரங்களில் பெண்கள் தற்கொலை செய்து கொள்வதும், விவாகரத்துக்கு விண்ணப்பிப்பதும் வழக்கமாகி உள்ளது. 

இந்தநிலையில் திருமணமான பெண்கள், கணவர்களால் படும் இன்னல்கள் குறித்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவ  கல்லூரியில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

அந்த கல்லூரியின் சமூகம் மற்றும் மருத்துவத்துறை சார்பில் கடந்த 2020 மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 

இதுதொடர்பான ஆய்வறிக்கை தற்போது  குடும்ப மருத்துவம் மற்றும் முதல்நிலை பராமரிப்பு என்ற ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.  அதில் 3ல் ஒரு பகுதி பெண்கள் கணவர்களால் கொடூர தாக்குதலுக்கு உள்ளாவதாகவும், பலர் கணவர்கள் தங்கள் மீது கையில் கிடைத்தவற்றை தூக்கி வீசுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் சிலர் கணவர்களால் கொடூர பாலிய துன்புறுத்தலுக்கு ஆளாகியதாகவும் கூறியுள்ளனர். 

இதற்கு கணவர்களின் குடிப்பழக்கம் மற்றும் கல்வி அறிவு குறைவும் ஒரு காரணமாக பெண்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் உயர்கல்வி அறிவு பெற்று, முடிவெடுக்கும் அதிகாரத்துடன் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்துள்ள பெண்களுக்கு இதுபோன்ற வன்கொடுமை குறிப்பிடும் அளவுக்கு இல்லை என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவ்வப்போது நிகழும் இந்த குடும்ப வன்கொடுமைகளால் தத்தளிக்கும் பெண்களில் 14 சதவீதம் பேர் குடும்பத்தினர், நண்பர்கள் மூலம் தீர்வு கண்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.