கோதுமையின் குறைந்தபட்ச ஆதார விலை 2% அதிகரிப்பு...

கோதுமையின் குறைந்தபட்ச ஆதரவு விலையை 2 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

கோதுமையின் குறைந்தபட்ச ஆதார விலை 2% அதிகரிப்பு...

கோதுமையின் குறைந்தபட்ச ஆதரவு விலையை 2 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து மத்திய அரசு கொள்முதல் செய்து வருகிறது. அந்தவகையில் சம்பா மற்றும் குறுவை பருவங்களில் 23 பயிர்களுக்கு தற்போது மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து வருகிறது. குறுவையை பொறுத்தவரை கோதுமை மற்றும் கடுகு போன்றவை முக்கியமான பயிர்களாகும். இந்த பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. அதன்படி, கோதுமையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை 2 சதவீதம் அளவுக்கு மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோதுமை குவிண்டால் ஒன்றுக்கு 40 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் குவிண்டால் ஒன்றின் குறைந்தபட்ச ஆதரவு விலை  ஆயிரத்து 975-ல் இருந்து 2 ஆயிரத்து 15 ஆக உயர்ந்துள்ளது.