2020-21 ஆம் நிதியாண்டில் இவ்வளவு கோடி முறைகேடா?தணிக்கைத் துறை அறிக்கை தாக்கல்!

2020-21 ஆம் நிதியாண்டில் இவ்வளவு கோடி முறைகேடா?தணிக்கைத் துறை அறிக்கை தாக்கல்!
Published on
Updated on
1 min read

புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு அரசு துறைகளில் அரசு நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அறிக்கை தாக்கல்:

புதுச்சேரியில் பாஜக - என் ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், 2020-2021 ஆம் நிதியாண்டிற்கான கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் அளித்த அறிக்கை சட்டப்பேரவையில் வைக்கப்பட்டது.

முறைகேடு, திருட்டு, கையாடல்:

அந்த அறிக்கையில் புதுச்சேரியில் வருவாய் வரவினங்கள் முந்தைய ஆண்டைவிட எண்ணூற்று 91 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளதாகவும், பல்வேறு அரசுத் துறைகளில் 28 புள்ளி பூஜ்யம் ஐந்து கோடி ரூபாய் அரசு பணத்தை முறைகேடு, திருட்டு மற்றும் கையாடல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரபரப்பு:

புதுச்சேரி மாநிலத்தில் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சுமார் 28 கோடி ரூபாய் அரசு பணம் திருடப்பட்டுள்ளதாக இந்திய கணக்காய்வு தணிக்கைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com