மத்திய அரசு ஊழியர்களுக்கான அக விலைப்படியில் 3 விழுக்காடு உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அக விலைப்படியில் 3 விழுக்காடு உயர்த்தி வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அக விலைப்படியில் 3 விழுக்காடு உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அக விலைப்படியில் 3 விழுக்காடு உயர்த்தி வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரியில் 4 விழுக்காடு, ஜூலையில் 3 விழுக்காடு, இந்த ஆண்டு ஜனவரியில் 4 விழுக்காடு என மொத்தமாக தற்போது வரை 28 விழுக்காடு அளவுக்கு, மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப் படியானது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 3 விழுக்காடு அளவுக்கு அக விலைப்படியை உயர்த்தி வழங்க உள்ளதாக அண்மையில் மத்திய அரசு அறிவித்து இருந்தது. இதற்கான ஒப்புதல் தற்போது மத்திய அமைச்சரவையில் பெறப்பட்டுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ஜூலை 1- ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு, அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 48 லட்சத்து 34 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் 65 லட்சத்து 26 ஆயிரம் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் படி உயர்வானது வழங்கப்பட உள்ளது. அகவிலைப் படி உயர்த்தப்பட்டதன் காரணமாக மத்திய அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு 34 ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கும் நிலையில் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட உள்ளதால், மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.