11 மலையேற்ற வீரர்கள் மாயம் - 2 பேர் பத்திரமாக மீட்பு, பனிபொழிவில் சிக்கி 5 பேர் பலி

இமாச்சலபிரதேசத்தில் காணாமல் போன 11 மலையேற்ற வீரர்களில் 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், பனிபொழிவில் சிக்கி 5 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹர்ஷிலியில் இருந்து 11 பேர் கொண்ட குழு கடந்த 14-ஆம் தேதி மலையேற்றம் பயணத்தை தொடங்கினர். இமாச்சல பிரதேசத்தில் கின்னூர் மாவட்டத்தை ஹர்ஷில் என்னும் பகுதியுடன் இணைக்கும் மிகவும் கடினமாக மலைதொடர் பாதையான லம்காகா மலைதொடர் வழியாக இக்குழு மலையேற்ற பயணத்தை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 17 மற்றும் 19 ஆம் தேதிகளில் லம்காகா பகுதியில் வீசிய கடுமையான பனிப்பொழிவில் சிக்கி அனைவரும் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களை மீட்க மீட்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில் 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே வெவ்வேறு இடங்களில் பனியில் சிக்கி உயிரிழந்து கிடந்த 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 4 பேரை தேடும் பணி நீடித்து வருவதாக கூறப்படுகிறது.