இந்தியா சார்பில் வழங்கப்பட்ட 500 பேருந்துகள்.....

இந்தியா சார்பில் வழங்கப்பட்ட 500 பேருந்துகள்.....

இலங்கையின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா சார்பில் 500 பேருந்துகள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளது. 

இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக 50 பேருந்துகள் அதிபர் மாளிகையில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவிடம் வழங்கப்பட்டது. 

கடந்த மாதம் 75 பேருந்துகள் வழங்கப்பட்ட நிலையில், அடுத்த மாத இறுதிக்குள் 500 பேருந்துகளையும் வழங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com