
ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியதை அடுத்து, பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் அதனை கழற்றி வைத்துவிட்டு வகுப்புகளில் பங்கேற்க கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் கல்லூரிகளுக்கு வரும் மாணவிகள், 144 தடை உத்தரவையும் மீறி கல்லூரி வளாகத்திலேயே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், கர்நாடகாவின் ஷிராலகொப்பாவில் உள்ள கல்லூரி ஒன்றில் 58 மாணவிகளை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 10க்கும் மேற்பட்ட மாணவிகள் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.