பழங்குடியினர் கின்னவுர் மாவட்டத்தின் கல்பாவில் அமைந்திருக்கும் அவரது இல்லத்தில் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் , நிர்வாக அதிகாரிகள் என அனைவரும் ஒன்றிணைந்து ஷியாம் சரண் நேகிக்கு கேக் வெட்டி 105 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து கின்னார் துணை ஆணையர் அபித் உசேன் சாதிக், நேகியின் பிறந்தநாளை இன்னமும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகளை செய்து, நேகி இமாச்சல பிரதேசத்துக்கு மட்டும் பெருமையைத் தேடித்தரவில்லை முழு நாட்டிற்கும் பெருமையைத் தேடி கொடுத்தவர் என்றார்.
இதையடுத்து நேகியின் மகன் வினய் கூறுகையில் எனது தந்தை மகிழ்ச்சியானவர் மற்றும் இதயப்பூர்வமானவர், அவருக்கு நினைவாற்றல் தான் சற்று பலவீனமாக உள்ளது. எனது தந்தை தன் வாழ்நாளில் இவ்வளவு பெருமையை அடைந்ததை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றார். இந்த பிறந்தநாள் விழாவில் காவல்துறை கண்காணிப்பாளர் , கல்பா எஸ்டிஎம், பாஜக பொதுச்செயலாளர் , கல்பா பஞ்சாயத்து பிரதான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நேகியை வாழ்த்தியுள்ளனர்.
ஷியாம் சரண் நேகி 1951 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசத்தின் கின்னவுர் மாவட்டத்தில் தனது வாக்குரிமையை பயன்படுத்தி சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் வரலாற்றைப் படைத்தவராவார்.
இவர் ஜூலை 1, 1917 ல் பிறந்தவர் அரசுப்பள்ளியில் ஆசிரியராக இருந்த காரணத்தால் முதலில் தேர்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்டு வந்தார்.
இதனை தொடர்ந்து நேகி தனது கிராமத்தின் வாக்குச்சாவடி கட்சியினரிடம் வாக்களிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தார். இவரின் கோரிக்கையை ஏற்ற சம்மந்தப்பட்ட அதிகாரி, நேகியை முதல் வாக்களர் ஆக அனுமதித்தார். அப்போது முதல் தற்போது வரை பஞ்சாயத்து தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலின் போது வாக்களிக்கும் வாய்ப்பை ஒரு போதும் தவறவிட்டதில்லை.