தொழில்நுட்ப வளர்ச்சியில் 5ஜி சேவை மிகப்பெரிய மைல்கல் - மத்திய இணையமைச்சர்!

இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் 5ஜி ஏலம் மிகப்பெரிய மைல்கல்லாக அமையும் என மத்திய இணையமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சியில் 5ஜி சேவை மிகப்பெரிய மைல்கல் - மத்திய இணையமைச்சர்!

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கைளை டிராய் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. அதன்படி 5ஜி அலைக்கற்றை ஏலத்தை நடத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் வழங்கப்படவுள்ள 5ஜி சேவை, 4ஜி சேவையை விட 10 மடங்கு அதிக வேகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் சந்திரசேகர், தற்போதுள்ள எந்த தொழில்நுட்பமும் செய்ய முடியாத வகையில், இந்த 5ஜி இணைப்பு அதிநவீன சேவைகளை வழங்கும் என்றும், 5ஜி சேவையானது 'மொபைல் இணையத்தின் எதிர்காலம்' என்றும் வரலாற்றில் முதல் முறையாக இணைய சேவையில் அளப்பரிய திறனை இந்த 5 ஜி சேவை வழங்க உள்ளதாகவும் கூறினார்.