6 மாநிலம், யூனியன் பிரதேச மக்கள் 100% தடுப்பூசி செலுத்தி சாதனை!

இந்தியாவில் உள்ள 6 மாநில மக்கள் நூறு சதவீதம் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

6 மாநிலம், யூனியன் பிரதேச மக்கள் 100% தடுப்பூசி செலுத்தி சாதனை!

இந்தியாவில் உள்ள 6 மாநில மக்கள் நூறு சதவீதம் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை தொடர்ந்து, நோய் எதிர்ப்பு திறனை பெருக்கிக்கொள்ள தடுப்பூசி செலுத்தும் நடைமுறையை மத்திய அரசு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்பயனாக இமாச்சலபிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நூறு சதவீதம் மக்கள் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தாதர் -நாகர் ஹாவேலி மற்றும் டாமன் - டையூவில்   6 புள்ளி 26 லட்சம் மக்கள் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.

இதேபோல் லட்சத்தீவில் 53 ஆயிரத்து 499 பேர், இமாச்சல பிரதேசத்தில் 55 புள்ளி 74 லட்சம் பேர், லடாக்கில் 1 புள்ளி 97 லட்சம் பேர் மற்றும் சிக்கிமில் 5 புள்ளி 10 லட்சம் பேர் மற்றும் கோவாவில் 11 புள்ளி 83 லட்சம் பயனாளிகள் கொரோனாவுக்கான முதல் டோசினை செலுத்திக் கொண்டுள்ளனர்.