கர்நாடக : இருதரப்பினருக்கு இடையே மோதல்.. வன்முறை சம்பவத்தில் 7 பேர் படுகாயம்!!

கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டம் கோரூர் நகரில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கர்நாடக : இருதரப்பினருக்கு இடையே மோதல்.. வன்முறை சம்பவத்தில் 7 பேர் படுகாயம்!!
Published on
Updated on
1 min read

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் கோரூர் நகரில் இரு சமூகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த மோதலின்போது இருத்தரப்பினரும் அப்பகுதியில் இருந்த கடைகளை அடித்து, உடைத்து சூறையாடினர். இதில் படுகாயமடைந்த 7 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மோதலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து, கோரூர் நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்களை கிண்டல் செய்ததால் வன்முறை சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, கோரூர் நகர் முழுவதும் போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com