நாடு முழுவதும் மேலும் 7,432 சாா்ஜிங் நிலையங்கள்..!

நாடு முழுவதும் மேலும் 7,432 சாா்ஜிங் நிலையங்கள்..!

நாடு முழுவதும் 800 கோடி ரூபாய் செலவில் மின்சார வாகனங்களுக்கான 7 ஆயிரத்து 432 ‘சார்ஜிங்’ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய மந்திரி தகவல் தொிவித்துள்ளாா். கார்பன் கழிவுகள் இல்லா சுற்றுச்சூழலை உருவாக்க மின்சார வாகனங்களை பயன்படுத்துவது அவசியம் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

தற்போது நாடு முழுவதும் 6 ஆயிரத்து 586 சார்ஜிங் நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் 800 கோடி ரூபாய் செலவில் மேலும் 7 ஆயிரத்து 432 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதித்து உள்ளதாக மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே தெரிவித்து உள்ளார். இந்தப்பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும் எனவும் அவா் தொிவித்துள்ளாா்.