மூளைச்சாவு அடைந்த 6 வயது சிறுமி... 5 பேரின் உயிர்களை காப்பாற்றி சாதனை!

உத்திரப்பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த 6 வயது சிறுமி 5 உயிர்களை காப்பாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

மூளைச்சாவு அடைந்த 6 வயது சிறுமி... 5 பேரின் உயிர்களை காப்பாற்றி சாதனை!

அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுடப்பட்ட நொய்டாவைச் சேர்ந்த சிறுமி ரோலி பிரஜாபதி, மருத்துவமனையில் அனுமதித்த போது மூளைச்சாவு அடைந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து உறுப்பு தானம் குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சிறுமியின் பெற்றோரிடம் பேசியதைத்தொடர்ந்து அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டனர்.

அதன்படி சிறுமியின் கல்லீரல், சிறுநீரகங்கள் தானம் பெறப்பட்டன. இதன் மூலம் டெல்லி எய்ம்ஸ் வரலாற்றில் மிக இளம் வயது தானம் செய்பவர் என்ற பெருமையை ரோலி பெற்றுள்ளார்.