யாரு பா இவரு? வனவிலங்கு குடும்பத்தையே கொண்டு வந்த நடத்திக்கிட்டு வராரு!!

யாரு பா இவரு?  வனவிலங்கு குடும்பத்தையே கொண்டு வந்த நடத்திக்கிட்டு வராரு!!
Published on
Updated on
2 min read

தெலங்கானாவில் பிரபல தொழிலதிபர் தனது பண்ணை வீட்டில் பல்வேறு அரிய வகை வன விலங்குகளை வளர்த்து வந்தது வனத்துறை அதிகாரிகள் சோதனையில் தெரியவந்துள்ளது.

சூதாட்டம் நடத்திய தொழிலதிபர்:

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரை சேர்ந்தவர் தொழிலதிபர் சிக்கோட்டி பிரவீன். கடந்த மாதம் நேபாளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில், இவர் சூதாட்டம் நடத்தியதாகவும், இதற்காக பிரமுகர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சூதாட்டத்தில் வென்றவர்களுக்கு ஹவாலா மூலம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து. இதையடுத்து, தொழிலதிபர் விசாரணைக்காக ஹைதராபாத்தில் உள்ள வருவாய் புலனாய்வுத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபருக்கு சொந்தமான பண்ணை வீடு:

இந்த நிலையில், மகபூப் நகர் மாவட்டம் கட்தால் அருகே சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள, தொழிலதிபருக்கு சொந்தமான பண்ணை வீட்டில், வனத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

பல்வேறு வன உயிரினங்கள்:

அப்போது அங்கு சட்டவிரோதமான வகையில் மலைப்பாம்புகள், அபூர்வ பறவைகள், ராட்ஷத பல்லிகள் உள்ளிட்ட  பல்வேறு வன உயிரினங்களை அவர் வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது வனத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மலை பாம்புகள், மஞ்சள் நிற பாம்பு, ராட்ஷத பல்லிகள் ஆகியவற்றுடன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்வதையும் அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில், உரிய அனுமதி பெற்ற பிறகே வன உயிரினங்களை வளர்த்து வருவதாக சிக்கோட்டி பிரவீன் கூறியுள்ளார். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com