பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர்..! வலைவீசி தேடி வரும் போலீசார்...!

பட்டப்பகலில் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர்..! வலைவீசி தேடி வரும் போலீசார்...!

புதுச்சேரி நகரத்தின் மைய பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகளை வெளியீட்டு போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரி நெல்லிதோப்பு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (27). இவர் புதுச்சேரி லால் பகதூர் சாஸ்திரி சாலை சின்ன மணிக்கூண்டு எதிரே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி பணிக்கு வந்துள்ளார். அப்போது வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தை அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்று பின்னர் மாலை வந்து பார்த்த போது தனது இருசக்கர வாகன மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இது குறித்து அவர் ஒதியன் சாலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 35 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் மதியம் 12:30 மணி அளவில் லோகநாதனின் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. இதனை அடுத்து இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வெளியீட்டு அந்த நபரை தேடி வருகின்றனர். மேலும் நகரின் மைய்ய பகுதியில் பட்டபகலில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் நேரத்தில் இருசக்கர வாகனம் திருடு போனது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.