பிளாட்ஃபாமில் வசித்து வந்த முன்னாள் முதலமைச்சரின் உறவினரின் புகைப்படம் இணையத்தில் வைரல்...

மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரின் உறவினர் ஒருவர் நடைபாதையில் வசித்து வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிளாட்ஃபாமில் வசித்து வந்த முன்னாள் முதலமைச்சரின் உறவினரின் புகைப்படம் இணையத்தில் வைரல்...

மேற்கு வங்க மாநில முன்னாள் முதலமைச்சராக புத்ததேவ் பட்டாச்சார்யா தொடர்ந்து 10 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த இவருடைய மனைவியின் சகோதரி இரா பாசு  ஆசிரியரான இவர் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள பிரியநாத் பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் 34 ஆண்டுகள் பணியாற்றியவர். முனைவர் பட்டம் பெற்றுள்ள இரா பாசு. கடந்த 2009 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு பாரா நகரில் வசித்து வந்தார். பிறகு கர்டா அருகில் வசித்து வந்துள்ளார்.

இதனையடுத்து   என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்த நிலையில், கொல்கத்தா டன்லப் பகுதியில், சாலையோரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வந்தது தெரியவந்துள்ளது.அழுக்கு நிறைந்த நைட்டியை அணிந்தபடி, அங்கிருக்கும் வியாபாரிகளிடம் உணவு பெற்று கொண்டு வசித்து வருகிறார். இதுபற்றி பேசிய அவர், நான் என் சொந்த முயற்சியில் ஆசிரியை ஆனேன். முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உறவினர் என்பதை பலர் அறிந்திருந்தாலும் எனக்கு எந்த விஐபி அடையாளமும் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆசிரியர் தினத்தன்று டன்லப் தொழிலாளர்கள் அழைத்து அவரை கவுரவவித்துள்ளனர். அப்போது அவர் பேசும்போது, அனைத்து ஆசிரியர்களும் என் மீது அன்பு செலுத்துகிறார்கள். பல மாணவர்கள் என்னை அடையாளம் வைத்துள்ளனர். சிலர் என்னை அணைக்கும்போது கண்ணீர் வடிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, அவரை மாவட்ட நிர்வாகம் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகிறது.