மும்ப்ரா மலையில் இருந்து குடியிருப்பில் விழுந்த பாறை...! ஒருவர் பலி..!

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள மும்ப்ரா நகரில் மலையிலிருந்து ஒரு பெரிய பாறை வீட்டின் மீது விழுந்ததில், 35 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்
மும்ப்ரா மலையில் இருந்து குடியிருப்பில் விழுந்த பாறை...! ஒருவர் பலி..!
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள மும்ப்ரா மலைப்பகுதியில் இருந்து ஒரு பாறை வீட்டின் மீது விழுந்ததில், கவிதா சுனில் என்ற 35 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவமானது நேற்று மாலை  5.20 மணியளவில் காவ்தேவி என்ற பகுதியில் நடந்ததாக தானே நகராட்சி நிறுவனத்தின், பிராந்திய பேரிடர் மேலாண்மை (ஆர்.டி.எம்.சி) பிரிவு தலைவர் அவினாஷ் சாவந்த் கூறியுள்ளார். 

உயிரிழந்த அந்த பெண்ணின் உடல், கல்வா சிவிக் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், கல்வா போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆர்.டி.எம்.சி குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உதவி செய்ததாகவும் அவர் கூறினார். மேலும் பேசிய அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியில் உள்ள 14 குடியிருப்புகள் காலி செய்யப்பட்டு, அப்பகுதியில் உள்ள மக்கள் குடிமைப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து விபத்து நடந்த பகுதியை உள்ளூர் எம்எல்ஏ ஜிதேந்திரா அவாத் நிலைமையை பார்வையிட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com