ஸ்கூட்டியில் நிரப்பப்பட்ட ரூ. 50000 மதிப்புள்ள பெட்ரோல்!!!

ஸ்கூட்டியில் நிரப்பப்பட்ட ரூ. 50000 மதிப்புள்ள பெட்ரோல்!!!
Published on
Updated on
1 min read

பெட்ரோல் பம்புகளில் குறைந்த அளவு பெட்ரோல் நிரப்புவது குறித்து அடிக்கடி புகார்கள் வந்த நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் வியப்பூட்டும் செயல் நடந்துள்ளது.  வாடிக்கையாளார் ஒருவர் ஸ்கூட்டியில் ரூ.550க்கு மட்டுமே பெட்ரோல் நிரப்பப்பிருந்த நிலையில் வாடிக்கையாளரிடம் இருந்து ரூ.55,000 வசூலிக்கப்பட்டுள்ளது.  விஷயம் தெரிய வந்ததும் பெட்ரோல் பம்ப் ஆபரேட்டரும் பதறியுள்ளார். பின்னர், தவறைச் சரி செய்து மீதித் தொகை வாடிக்கையாளரின் கணக்கில் திரும்பச் செலுத்தப்பட்டுள்ளது. 

தானேயில், வாடிக்கையாளர் ஒருவர் ஹோண்டாவின் ஆக்டிவா ஸ்கூட்டியில் பெட்ரோல் நிரப்ப பெட்ரோல் பம்பிற்கு வந்துள்ளார். அவர் ரூ.550 மதிப்பிற்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார் ஆனால் ஆன்லைனில் பணம் செலுத்தியபோது, ​​அவரது கணக்கில் இருந்து ரூ.55,000 கழிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பெட்ரோல் பங்க் மேலாளரிடம் புகார் செய்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com