முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்  

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக உள்ளதாக, எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்   

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக உள்ளதாக, எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையான காய்ச்சல் காரணமாக டெல்லி  எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங்கிற்கு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாக, காங்கிரஸ் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மன்மோகன் சிங்கின் உடல்நலம் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவரது உடல் நலம் சீராக உள்ளது என்றும், அவருக்கு வழக்கமான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.