புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் ஆம்ஆத்மி…  

புதுச்சேரியில் சமூக இயக்கங்களுடன் சேர்ந்து ஆம்ஆத்மி கட்சி உள்ளாட்சி தேர்தலை சந்திக்க இருப்பதாக ஆம்ஆத்மி கட்சியின்  புதுச்சேரி பொறுப்பாளரும் டெல்லி சட்டமன்ற உறுப்பினருமான சோம்நாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய டெல்லி சட்டமன்ற உறுப்பினர் சோம்நாத், புதுச்சேரியில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடும் என்றார். ஒத்த கருத்துடைய  இயக்கங்கள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க விருப்புகிறோம் எனவும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கூடாது தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே ஆம்ஆத்மி கட்சியின் விருப்பம் எனவும் அவர் கூறினார்.

மக்களிடையே நேரடி தொடர்பு ஏற்படுத்தவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறிய அவர் மக்கள் தங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.