"புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு" டெல்லி சென்றது ஆதீனம் குழு!

"புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு" டெல்லி சென்றது ஆதீனம் குழு!
Published on
Updated on
1 min read

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்காக 20 பேர் கொண்ட ஆதீனம் குழு சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். 4 மாடிகள் கொண்ட இந்தப் புதிய நாடாளுமன்றம் ரூ.970 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் 1,224 எம்.பி.க்கள் அமர முடியும். இந்திய ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரம்மாண்ட அரசியல் சாசன அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கேன்டீன், வாகன பார்க்கிங் வசதிகளும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மே 28-ம் தேதி திறக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனை திறந்துவைக்கிறார். இந்தத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக பல்வேறு எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடியே திறந்து வைப்பதை கண்டித்தும், திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததை கண்டித்தும் இவ்விழாவை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து புது நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க 20 பேர் கொண்ட ஆதீனம் குழு டெல்லி சென்றது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆதீனம் குழு பிரதமரிடம் செங்கோலை பரிசாக வழங்குவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com