18 மாதங்களுக்கு பின் பணிக்கு திரும்பும் பிரபல நிறுவன ஊழியர்கள்!

கொரோனா காரணமாக வீட்டிலிருந்து பணியாற்றி வந்த விப்ரோ நிறுவன பணியாளர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் இன்று அலுவலகம் திரும்பியுள்ளனர்.
18 மாதங்களுக்கு பின் பணிக்கு திரும்பும் பிரபல நிறுவன ஊழியர்கள்!
Published on
Updated on
1 min read

கொரோனா காரணமாக வீட்டிலிருந்து பணியாற்றி வந்த விப்ரோ நிறுவன பணியாளர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் இன்று அலுவலகம் திரும்பியுள்ளனர்.

கொரோனா சூழலை ஒட்டி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும்  ஊரடங்கு நடைமுறை அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மட்டுமல்லாது, தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவன ஊழியர்களும் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டனர்.

இந்தநிலையில், திங்கள் கிழமை முதல் அலுவலகங்களுக்கு வருமாறு ஊழியர்களுக்கு விப்ரோ நிறுவனத்தின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர்கள், கொரோனா விதிகளை பின்பற்றி பணிக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தொற்று பரவாமல் இருக்க, அலுவலகங்களிலும் கொரோனா நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com