ஒத்துழைக்காத மோடி அரசாங்கமும் தப்பிக்க முயலும் நீதிபதியும்!!!!!

ஒத்துழைக்காத மோடி அரசாங்கமும் தப்பிக்க முயலும் நீதிபதியும்!!!!!

பிரதமர் நரேந்திர மோடி 2017 இல் பெகாசஸ் நிறுவனத்தை சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான ஒட்டுமொத்த ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வாங்கியதாகக் கூறப்பட்டது.  இதன் மூலம் எதிர்கட்சி தலைவர்களின் உரையாடல்கள் ஒட்டுகேட்கபடுவதாக குற்றசாட்டு எழுந்தது.  வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

பெகாசஸ் மென்பொருள்:

பெகாசஸ் ஸ்பைவேர் ஒரு தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஹேக்கிங் மென்பொருள்.  மொபையில் பதிவிறக்கம் செய்தவுடன் 24 மணிநேரமும் நம்மை கண்காணிக்கும் சாதனாமாக மாறிவிடும்.  இதன் மூலம் நம் மொபைலில் நாம் செய்யும் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்கவும் கட்டுபடுத்தவும் முடியும்.  நமது மொபைலின் கேமராவை கூட அதனால் கட்டுப்படுத்த முடியும்.  மேலும் உரையாடல்களை கேட்கவும் அவற்றை பதிவு செய்யவும் கூட முடியும்.  நாம் எங்கே இருக்கிறோம் யாரை சந்திக்கிறோம் என்பதைக் கூட துல்லியமாக கூறிவிடும்.

பெகாசஸ் உருவாகிய இடம்:

பெகாசஸ் மென்பொருள் இஸ்ரேலின் என்எஸ்ஓ என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு உலகம் எங்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  "குற்றம் மற்றும் பயங்கரவாத செயல்களைத் தடுப்பது" என்று கூறி சந்தைப்படுத்தியது.  மேலும் மென்பொருள் அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்கப்படும் என்றும் உறுதியளித்தது.  இது மொபைலில் குறுஞ்செய்திகள் அல்லது மின்னஞ்சல் மூலம் பரப்பப்படுகிறது.

இந்தியாவில் பெகாசஸ்:

 பிரதமர் நரேந்திர மோடி 2017 இல் பெகாசஸ் நிறுவனத்தை சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான ஒட்டுமொத்த ஆயுத ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வாங்கியதாகக் கூறப்பட்டது. ஆனால் இந்திய அரசியல்வாதிகள் அதை கையகப்படுத்துவதையோ அல்லது பயன்படுத்துவதையோ ஒப்புக்கொள்ளவில்லை.

இந்திய உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு:

அரசியல் எதிரிகளுக்கு எதிராக பெகாசஸை இந்திய அரசாங்கம் பயன்படுத்துகிறது என்ற குற்றசாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 2021 இல், இந்தியாவின் உச்ச நீதிமன்றம், குடிமக்களை சட்டவிரோதமாக குறிவைக்க பெகாசஸை தேசிய அரசாங்கம் பயன்படுத்தியதா என்பதை விசாரிக்க ஒரு தொழில்நுட்பக் குழுவை நிறுவியது.

தனியுரிமை மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகிய இரண்டிற்கும் உள்ள உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தது, மேலும் ஒரு வெளிநாட்டு நிறுவனம் சட்டவிரோத உள்நாட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதா என்பது குறித்தும் அக்கறை காட்டியது.

எதிர்கட்சிகள் விமர்சனம்:

அரசியல் எதிரிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தேசத்துரோகம் மற்றும் தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்ததாக குற்றம் சாட்டினர்.  அதே நேரத்தில் ஆதரவாளர்கள் ஸ்பைவேரின் பயன்பாட்டிற்கான நியாயமான "சட்டப்பூர்வ இடைமறிப்பு" என்று மேற்கோள் காட்டியுள்ளனர் .

என்எஸ்ஓ பெகாசஸை அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பனை செய்தால் இந்திய குடிமக்களுக்கு எதிராக வெளிநாட்டு அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால் இது அரசியல்வாதிகள், சிந்தனைக் குழுக்கள் மற்றும் இணைய சுதந்திர அறக்கட்டளை போன்ற இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மீது பயன்படுத்தப்பட்டுள்ளது. எப்படியிருந்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்று அவர்கள் வாதிட்டனர்.

விசாரணைக் குழு:

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தனியுரிமையை சமரசம் செய்ததாகக் கூறப்படும் பெகாசஸ் ஸ்னூப்பிங் சர்ச்சையை ஆராய இந்திய உச்ச நீதிமன்றம் நிபுணர் குழுவை நியமித்தது. உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.  தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி, இந்த விவகாரத்தில் விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு மறுத்துவிட்டது.

பெகாசஸ் உளவு விசாரணை:

பெகாசிஸ் உளவு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.  உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையிலான குழு சீலிட்ட கவரில் சமர்பித்த அறிக்கை பிரித்து படிக்கப்பட்டது.  பெகாசஸ் அறிக்கையின் சில பகுதிகள் தனிப்பட்ட தகவல்களை கொண்டிருக்க கூடும் என்பதால் அதை ரசிகசியம் காக்க வேண்டியுள்ளது.  தொழில்நுட்பக் குழு அறிக்கைகள் பகிரங்கப்படுத்தப்படக்கூடாது என்று குழு கருதுகிறது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

சிறப்பு குழுவின் அறிக்கை:

பெகாசிஸ் உளவு தொடர்பாக சமர்பிக்கப்பட்ட அறிக்கை 3 பகுதிகளாக சமர்பிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் குழுவிடம் 29 செல்போன்கள் வழங்கப்பட்டது; அதில் 5 செல்போன்களில் மால்வேர் (வைரஸ்) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை பேகசஸ் என கூற முடியாது என தொழில் நுட்ப குழு கூறியுள்ளது.

பெகாஸிஸ் ஸ்பைவேரால் பாதிக்கப்பட்ட அலைபேசியின் டிஜிட்டல் படங்கள், தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை மற்றும் மேற்பார்வை நீதிபதியான ரவீந்திரனின் அறிக்கை ஆகியவை உள்ளது

ஒத்துழைக்காத அரசு:

மால்வேர் அல்லது ஸ்பைவேர் உள்ளதா என்று தொலைபேசிகளை ஆய்வு செய்யும் பணிக்கு அரசு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என அறிக்கையில் குழு கூறியுள்ளது.

குழு பரிந்துரை:

சைபர் தாக்குதல்களை விசாரிப்பதற்கும், நாட்டின் இணைய பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதற்கும் சிறப்பு புலனாய்வு அமைப்பு இருக்க வேண்டும் என குழு பரிந்துரை செய்துள்ளது.

இத்தகைய மென் பொருட்கள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்படுத்தலாம் குறிப்பாக குடிமக்களின் தனியுரிமையை மீறப்படலாம் என்ற   கவலையை  பொதுமக்களிடம் ஏற்படுத்தலாம்  எனவே கண்காணிப்புக்காக இத்தகைய மென் பொருட்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தேவை என குழு பரிந்துரை செய்துள்ளது.

மூத்த வழக்கறிஞர் கோரிக்கை:

29 செல்போன்கள் வழங்கியவர்களுக்கு தங்களுடைய செல்போன்களில் இருந்த தொழில்நுட்ப குறைபாடுகள் தொடர்பான திருத்தப்பட்ட அறிக்கையை வழங்க முடியுமா என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு மூத்த வழக்கறிஞர் சிபில் கோரிக்கை வைத்துள்ளார். 

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக முழுமையான அறிக்கையை வழங்க முடியாது என நீதிபதி தெரிவித்த நிலையில் சிபில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

தப்பிக்க முயலும் ரமணா:

பெகாசஸ் விவகாரத்தில் தன்னுடைய கருத்து என்ன என்பதை நாளை மறுநாள் தெரிவிக்கிறேன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

( நாளையுடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்வி ரமணா என்பது இங்கு கவனிக்கத்தக்கது)

இதையும் படிக்க:  ”குஜராத்தின் செயலால் இந்தியா வெட்கி தலைகுனிகிறது” பாஜக மூத்த தலைவர்...!!!என்ன செய்தது குஜராத்!!!