காலியாகும் பாஜக கூடாரம்..! உ.பி-யில் மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா..!

உத்திரபிரதேசத்தில் உச்சக்கட்ட குழப்பத்தில் பாஜக..!

காலியாகும் பாஜக கூடாரம்..! உ.பி-யில் மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா..!

 உத்தரப்பிரதேசத்தில் பாஜகவில் இருந்து மேலும் ஒரு அமைச்சர் விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார். யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்த தாரா சிங் செளகான் பிற்படுத்த பிரிவினர் இடையே செல்வாக்கு மிக்கவராக கருதப்படுகிறார்.  பாஜகவில் இருந்து விலகிய அவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில், சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். இதேபோல பாஜகவுடன் கூட்டணியில் 
உள்ள அப்னா தளம் எம். எல்.ஏ ஆர் கே வர்மா என்பவரும் சமாஜ்வாதியில் இணைந்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 
பிற்படுத்தப்பட்டோர் நலனில் பாஜக அக்கறை செலுத்தவில்லை எனவும் அதனாலேயே அக்கட்சியிலிருந்து விலகியதாகவும் தாரா சிங் செளகான் தெரிவித்துள்ளார். இதேபோல 8 எம்.எல்.ஏக்களும் பாஜகவில் இருந்து விலகி அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாதியில் இணைந்திருப்பதால், வரும் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது..