திருப்பதி; மீண்டும் ஒரு சிறுத்தை சிக்கியது!

திருப்பதி; மீண்டும் ஒரு சிறுத்தை சிக்கியது!

திருப்பதி மலைப்பாதையில் வைக்கப்பட்ட கூண்டில்  சிக்கிய மற்றொரு சிறுத்தை

திருப்பதி நடைப்பாதையில் பாத யாத்திரையாக சென்ற சிறுவர்களை தாக்கி வந்த சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்டுருந்த கூண்டில் மூன்றாவதாக ஒரு சிறுத்தை சிக்கியது. 3 நாட்களுக்கு முன்பு லட்சுமி நரசிம்ம சன்னதி அருகே வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கிய நிலையில், அதே பகுதிக்கு அருகே வைத்திருந்த கூண்டில் இன்று மற்றொரு சிறுத்தை சிக்கியது. சிறுத்தையை பிடிக்க மொகாலி மிட்டா, லட்சுமி நரசிம்மசுவாமி கோயில், மலைப்பாதையின் 35வது திருப்பம் என மூன்று இடங்களில் கூண்டுகள் அமைக்கப்பட்டுருந்தது. இந்நிலையில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அருகே உள்ள கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது. 50 நாட்களுக்குள் திருப்பதி மலைப்பாதையில் மூன்று சிறுத்தைகளை அதிகாரிகள் கூண்டு வைத்து பிடித்துள்ளனர். இதில் முதலில் பிடிப்பட்ட சிறுத்தை மட்டும் பாக்ராபேட்டை வனப்பகுதியில் விடப்பட்டது.

இதனிடையே, நெல்லூரை சேர்ந்த 6 வயது சிறுமி லட்ஷிதா முகம் பாதி இல்லாமல் இருந்ததால் சிறுத்தை அடித்து கொன்று திண்றதா என்ற சந்தேகம் எழுந்ததால், நான்கு நாட்களுக்கு முன்பு பிடிப்பட்ட சிறுத்தையை மட்டும் திருப்பதியில் உள்ள வன விலங்குகள் அருங்காட்சிகத்திற்கு கொண்டு சென்று அதன் இரத்தம், நகம், முடி சேகரித்து மரபணு சோதனைக்கு ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர். இதில் மனித மாமிசம் சாப்பிட்டதற்கான தடயம் இருந்தால் அந்த சிறுத்தையை அருங்காட்சியகத்திலேயே வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மற்றொரு சிறுத்தை பிடிப்பட்டுள்ள நிலையில் அதற்கும் மரபணு சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்க:கால்நடை மருத்துவ படிப்பு; அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு!