இந்தியாவுக்கு வரும் மேலும் ஒரு தடுப்பூசி...

ஜைடஸ் காடிலா நிறுவனம் தயாரித்த டி.என்.ஏ தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதியை கோரி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜைடஸ் காடிலா 12 முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கான தடுப்பூசியை தயாரித்து பரிசோதித்து வந்தது. டி.என்.ஏ அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசியில் 3 கட்ட பரிசோதனைகளும் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தங்கள் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதியை கோரி ஜைடஸ் காடிலா நிறுவனம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது. இந்த தடுப்பூசி பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் கொடுக்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு அனுமதியளிக்கப்படும் பட்சத்தில் விரைவில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.