தீபாவளி போனஸுக்கு ஒப்புதல்... 78 நாட்கள் சம்பளம் என தகவல்...

ரயில்வே பணியாளர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தீபாவளி போனஸுக்கு ஒப்புதல்... 78 நாட்கள் சம்பளம் என தகவல்...

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனுராக் தாக்கூர், 11 லட்சத்து 27 ஆயிரம் ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தித்திறன் சார்ந்த போனசாக  ஆயிரத்து 832 கோடி ரூபாய் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.

எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியமாக 22 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாகவும் கூறினார்.

பிரதமரின் வடகிழக்கு மாநில வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக 6 ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் மத்திய அமைச்சரவை  ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com