மத்திய சட்டத் துறை அமைச்சராக 'அர்ஜூன் ராம் மேக்வால்' நியமனம்...!

மத்திய சட்டத் துறை அமைச்சராக 'அர்ஜூன் ராம் மேக்வால்' நியமனம்...!

மத்திய சட்டத் துறை அமைச்சராக அர்ஜூன் ராம் மேக்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய சட்டத் துறை அமைச்சராக பிக்கானேர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன் ராம் மேக்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜூஜூ புவி அறிவியல் துறை அமைச்சராக மாற்றபட்டுள்ளார். ஏற்கனவே மத்திய கலாச்சார துறை இணை அமைச்சராக இருந்த அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு கூடுதலாக  சட்டத்துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

 2021 ஆம் ஆண்டு பாஜக அமைச்சரவையில் கிரண் ரிஜூஜூ சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக அப்பதவியில் நீடித்த அவர் நீதிபதிகள் நியமனம் தொடபான அதிகாரம் மத்திய அரசுக்கே இருக்க வேண்டும் என்றும் கொலீஜியம் கலைக்கப்பட வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

இதையும் படிக்க:கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் இவர்தான்...அதிகாரப்பூர்வமாக அறிவித்தது காங்கிரஸ் தலைமை...!