மாஜி அமைச்சருக்கு கைது வாரண்ட்- சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவு

யோகி அமைச்சரவையிலிருந்து விலகிய எஸ்.பி மவுரியா மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாஜி அமைச்சருக்கு கைது வாரண்ட்- சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவு

யோகி அமைச்சரவையிலிருந்து விலகிய எஸ்.பி மவுரியா மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யோகி அமைச்சரவையில் துணை முதல்வராகவும், தொழில்துறை அமைச்சருமாக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து, அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதுமட்டுமல்லாது வருகிற 14ம் தேதி சமாஜ்வாடி கட்சியில் இணைய உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில்,  எஸ் பி மவுரியா வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய  வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராக அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில்,  அவர் ஆஜாராகததால் கைது வாரண்ட் பிறப்பித்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.