முடிவடைந்த சட்டமன்ற தேர்தல்... விலை உயர்த்தப்பட்ட சிலிண்டர்!!!

முடிவடைந்த சட்டமன்ற தேர்தல்... விலை உயர்த்தப்பட்ட சிலிண்டர்!!!

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தியிருப்பது, இல்லத்தரசிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.  சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.

அதன் அடிப்படையில் இன்று மார்ச் 1ஆம் தேதி என்பதால், விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.  அதன்படி, 14 புள்ளி 2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை,50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.  இதனால் கடந்த மாதம்  ஆயிரத்து 68 ரூபாய் 50 காசுகளுக்குக்கு விற்பனையான சிலிண்டர் இன்று முதல் ஆயிரத்து 118 ரூபாய் 50  காசுகளுக்கு  விற்பனை செய்யப்பட உள்ளது.

அதேபோல, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 223 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.  இதன் மூலம் 2 ஆயிரத்து 268 ரூபாய்க்கு வணிக  சிலிண்டர் விற்பனை செய்யப்படவுள்ளது.

 3 மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில், சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு இருப்பது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் சிலிண்டர் விலை ஏற்றத்தால் உணவகங்களில் உணவுப்பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  

இதையும் படிக்க:  முதலமைச்சர் பிறந்தநாள்... வாழ்த்துகள் தெரிவித்த திரை பிரபலங்கள்!!