
சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியதாக கூறப்படும் தகவல் பொய் என மகராஷ்ரா துணை முதல்வர் அஜித்பவார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அஜித்பவார் உறவினர்களுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தி, 184 கோடி ரூபாய் அளவுக்கு கணக்கில் காட்டாமல் வருமானம் ஈட்டப்பட்டிருப்பதை கண்டுபிடித்தது.
இதனிடையே அஜித் பவாருக்கு சொந்தமான ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியதாக நேற்று தகவல் வெளியானது. ஆனால் இத்தகவல் பொய் என்றும், அஜித் பவாரின் புகழை கெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி எனவும் அவரது வழக்கறிஞர் பிரஷாந்த் பட்டீல் தெரிவித்துள்ளார்.