முல்லை பெரியாறு அணையில், பழுதுகள்  சரிசெய்யப்பட்டுவிட்டது... உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்...

முல்லை பெரியாறு அணையில், பழுதுகள்  சரிசெய்யப்பட்டதால், பாதுகாப்பு சார்ந்த பேச்சுக்கு இனி இடமில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு  தெரிவித்துள்ளது.

முல்லை பெரியாறு அணையில், பழுதுகள்  சரிசெய்யப்பட்டுவிட்டது... உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்...

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, அதன் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணையின் போது, அணையின் பாதுகாப்பு தன்மையை ஆய்வு செய்ய சர்வதேச நிபுணர்கள் குழு ஏற்படுத்தும்படி கோரப்பட்டது. ஆனால் சர்வதேச நிபுணர்களுக்கு இணையாக இந்திய நிபுணர்களும் நிபுணத்துவம் பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அணையின் பாதுகாப்பு குறித்த அறிக்கையினை தாக்கல் செய்ய கண்காணிப்பு குழுவிற்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்துள்ள மத்திய அரசு, அணைக்கான மதகுகள், கதவுகள் என நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள தேவைகளும், பழுதுகளும் சரிசெய்யப்பட்டு விட்டதாக கூறியுள்ளது. கிடப்பில் உள்ள வேலைகளும் நடப்பாண்டுக்குள் சரிசெய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற 25ம் தேதி விசாரணைக்கு வருகிறது.