பிரபலமாக தான் மை ஊற்றினேன்!- விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத்தை தாகியவர் வாக்குமூலம்:

கர்நாடகாவுக்கு வருகைத் தந்த விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர், கன்னடாவில் பேசாத காரணத்தால், அவர் மீது பேனா மை ஒருவர் ஊற்றியுள்ளார். மேலும், தான் இதன் மூலம் பிரபலமாக அவர் மீது இப்படிப்பட்ட தாக்குதலை நடத்தியதாகவும் தெரிவித்தது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

பிரபலமாக தான் மை ஊற்றினேன்!- விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத்தை தாகியவர் வாக்குமூலம்:

விவசாயிகளுக்கான சட்டத்திருத்தங்களை எதிர்த்து, கடந்த திங்கட்கிழமை அன்று, கர்நாடகாவில் உள்ள காந்தி பவனில், விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் ராகேஷ் திகைத் பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்திருந்தார். அந்த சந்திப்பில், கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு விவசாயி, பணம் கேட்பது பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்தும் பேசுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

திடீர் தாக்குதல்:

ஆனால், பேசிக்கொண்டிருந்த ராகேஷை நோக்கி, திடீரென பாய்ந்த மர்ம நபர், அவரை மைக் வைத்து அடித்ததோடு, அருகில் இருந்து பேனா மை ஊற்றியும் தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சந்திப்பில் கலந்து கொண்ட மற்ற விவசாயிகள், நாற்காலிகளை தூக்கி எரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி அங்கு பெரும் பரபரப்பு நிலவியுள்ளது. தாக்கப்பட்ட ராகேஷைப் பாதுகாக்க, மேடைக்கு ஒரு சிலர் வந்தாலும், தாக்குதலை நிறுத்தாததால், அந்த நபர் போலீசாரிடம் பிடித்துக் கொடுக்கப்பட்டார்.

Rakesh Tikait - Microphone, ink attack on Rakesh Tikait in Bengaluru -  Telegraph India

திட்டமிட்ட செயல்:

இந்த சம்பவம் முன்பே திட்டமிடப்பட்டதாகத் தெரிந்த நிலையில், சரியான பாதுகாப்பு அளிக்கபடவில்லை என மாநில அரசையும், காவல் துறையையும் ராகேஷ் குற்றம் சாட்டினார். இது குறித்து பெசியபோது, “இது திட்டமிடப்பட்ட தாக்குதல்! அரசு இது குறித்த விசாரணை நடத்த வேண்டும்” என கூறினார். சிறிய காயங்களுடன், அங்கிருந்து ராகேஷ் பத்திரமாக வெளியேற்றப்பட்டார்.

மூவர் கைது:

இந்த சம்பவம் தொடர்பாக, மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. கன்னட சார்பு அமைப்புகளைச் சேர்ந்த பரத் ஷெட்டி, பிரதீப், ஷிவ குமார் ஆகிய நபர்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது, ஐ.பி.சி பிரிவுகள் 355 (தாக்குதல்), 354 (பெண்கள் மீது அடக்குமுறை கையாளுதல்), 324 (காயப்படுத்துதல்), 341 (தவறான கையாளுமை), 427 (துன்புறுத்துதல்), 504 (வேண்டுமென்றே அவமதித்தல்) மற்றும், 506 (மிரட்டல்) ஆகியவற்றின் கீழ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எதற்கு இந்த சந்திப்பு?

கர்நாடக விவசாயிகள் தலைவரான கோடிஹள்ளி சந்திரசேகர் மீது நடத்தப்பட்ட ஸ்டிங் ஆபரேஷனில், டெல்லியில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக 3000 கோடி ரூபாய் கோரிக்கை வைத்ததாகக் கூறப்பட்டதால், பல விவசாயிகள் மனமுடைந்து போனதாகவும், அவர்களது மனவலிமையை மேம்படுத்தி, சட்டத்திருத்தங்களை திருப்பி பெறவும் இந்த சந்திப்பு வைக்கப்பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலரும், விவசாயிகள் உரிமை ஆர்வலருமான சுக்கி நஞ்சுண்டசாமி கூறினார்.

விசாரணை:

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள், போலீசின் விசாரணையில், ராகேஷ் திகைத் கன்னட நாட்டிற்கு வந்து கன்னடத்தில் பேசாததன் காரணமாகதான் தாங்கள் தாக்கியதாகத் தெரிவித்துள்ளார். இது மிகவும் போலியான வாக்குமூலமாக இருப்பதாக சந்தேகித்த போலீசார், தீவிரமாக மேலும் விசாரித்த நிலையில், தற்போது, மக்கள் மத்தியில் பிரபலமாவதற்காக தான் அவரை இப்படி தாக்கியதாக கூறியுள்ளனர். உண்மையில் ஏன் தாக்கினர் என்று பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும், இந்த சம்பவத்தால், மாநிலம் மீது கரும்புள்ளி ஏற்பட்டுள்ளதாக, காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.