கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதற்காக மணிப்பூர் முதலமைச்சர் வீட்டின் மீது தாக்குதல் முயற்சி.!

மணிப்பூரில் கலவரம் நீடித்து வரும் நிலையில் முதலமைச்சர் வீட்டை தாக்க முயற்சித்த  போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மணிப்பூரில் மாதக்கணக்கில் நீடித்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதற்காக முதலமைச்சர் பைரேன் சிங்குக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்நிலையில், இம்பாலில் உள்ள அவரது பூர்வீக வீட்டை நோக்கி ஏராளமான போராட்டக்காரர்கள் நேற்றிரவு திரண்டு வந்தனர்.

வீட்டை தாக்கும் நோக்கில் வந்த அவர்களை, சுமார் 100 மீட்டர் தூரத்திலேயே தடுத்து நிறுத்திய போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க   | சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக செல்லும் பேருந்துகள் நிறுத்தம்!!