நேதாஜியை மறக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும்....நினைவூட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும்....

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126-வது பிறந்தநாளை முன்னிட்டு அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூவர்ணக் கொடியை ஏற்றினார். 

நேதாஜியை மறக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும்....நினைவூட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும்....

நேதாஜி சுபாஷ் சந்திர போஸை மறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் நரேந்திர மோடி அரசு அந்தமானில் நினைவிடம் கட்டுவது போன்ற பல முயற்சிகளை எடுத்துள்ளது என்றும், அதனால் நாடு எப்போதும் நேதாஜி மற்றும் அவரது பணிகளை நினைவில் வைத்திருக்கும் என்றும் ஷா தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில்:

நேதாஜி 1943 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி ஜிம்கானா மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றியதையும், இன்று அதே இடத்தில் ஷா கொடியேற்றியதையும் பெருமையுடன் கூறினார் அமித் ஷா. இந்த மைதானத்தின் பெயர் தற்போது நேதாஜி ஸ்டேடியம் என அழைக்கப்படுகிறது எனக் கூறிய ஷா
நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி 23ஆம் தேதி பராக்கிரம் திவாஸ் என்று கொண்டாடப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளார்.

நினைவூட்டும் விதமாக...:

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையை புதுதில்லியில் கடமையாற்றும் பாதையில் நிறுவியுள்ளோம் எனவும் இது எதிர்காலத்தில் நமது தலைமுறைக்கு அவர் ஆற்றிய கடமையை நினைவூட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மோடியை பாராட்டிய அமித்ஷா:

பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு அவர்களின் பெயரை சூட்டுவது பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை காட்டுவதாக உள்ளதாக அமித் ஷா கூறியுள்ளார்.

நேதாஜியை மறக்க மாட்டோம்:
 
நேதாஜியை ஒருபோதும் மறக்க மாட்டோம் என்க் கூறிய அவர் துணிச்சல் உள்ளவர்கள் ஆற்றலுக்காக யாரையும் சார்ந்து இருப்பதில்லை எனக் கூறியுள்ளார்.  மேலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையை புது தில்லியில் உள்ள கடமைப் பாதையில் நிறுவியுள்ளதாகவும் அது எதிர்காலத்தில் நம் தலைமுறைக்கு நம் நாட்டிற்கு அவர் ஆற்றிய கடமையை நினைவூட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  வீர மரணம் அடைந்த வீரர்களின் வீர கதை.......