பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி... பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்.பிக்கள் குழு கூட்டம்...

பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி... பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்.பிக்கள் குழு கூட்டம்...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில் பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் பிரச்சனை போன்றவற்றை எழுப் பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற உறுப் பினர்களின் குழு கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே. பி.நட்டா, மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி மற்றும் பிற பாஜக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இதில், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் அமளியை எவ்வாறு சமாளிப்பது, மசோதாக்களை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து உறுப் பினர்களுக்கு கட்சி தலைமை ஆலோசனைகளை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.