
மத்திய அரசின் அக்னிவீர் திட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இத்திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் காங்கிரஸ் இன்று நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிலையில் அக்னிவீரர்களை தனது அலுவலகத்தில் பாதுகாவலாளியாக நியமிக்க விரும்புவதாக பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா பேசிய பேச்சு எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், தனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், திரித்து கூறப்பட்டுள்ளதாகவும் இதற்கு "டூல்கிட் கும்பல்" தான் காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.